tamil world

மொழியும் தொழிற்பாடுகளும்

(அ) தமிழ்மொழி வளர்ச்சி 

   மிக பழமையானதும் நீண்டகால வரலாற்றைக் கொண்டதுமான தமிழ்மொழி திராவிட மொழிக்குடும்பதை சேர்ந்தவையாகும். மிகப்புராதன காலந்தொட்டு இக்காலம் வரையும் தமிழ்மொழி வளர்ச்சி அடைந்துள்ள விதத்தை நோக்குவோம்.


(அ.அ) புராதனகாலம்

மிகப்பழங்காலந் தொட்டு இன்றுவரை தமிழ் மொழியில் பல்வேறு கலாசாரங்களின் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மொழியின் இன்றைய உருவம் இவற்றின் பெறுபேறு எனக் கூறலாம்.பல்வேறு காலப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியின் மொத்த உருவமே இன்றைய தமிழ்மொழி.  உலகில் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்து போயின.ஒரு சில மொழிகள் மட்டும் இன்னும் அழியாமல் நிலைபெற்றுள்ளன. அவ்வாறு நிலைபெற்றுள்ள மொழிகளில் சில பேச்சு வழக்கிழந்து இலக்கிய மொழியாக உள்ளன. இவ்வாறு தோன்றி செல்வாக்குடன் வளர்ந்து இன்றளவும் வாழ்ந்து விளங்கும் மொழிகளுக்குள் ஒன்று

தொன்மையான காலம் - கிமு. 30ம் நூற்றாண்டு- கிமு. 3ம் நூற்றாண்டு

சங்ககாலம்                          - கிமு. 3  ம் நூற்றாண்டு- கிபி . 3ம் நூற்றாண்டு

சங்கமருவிய காலம்       - கிபி . 3  ம் நூற்றாண்டு- கிபி . 6ம் நூற்றாண்டு

பல்லவர் காலம்                 - கிபி . 6  ம் நூற்றாண்டு- கிபி . 9ம் நூற்றாண்டு

சோழர் காலம்                     - கிபி . 9  ம் நூற்றாண்டு- கிபி .13ம் நூற்றாண்டு

நாயக்கர் காலம்                 - கிபி . 14ம் நூற்றாண்டு- கிபி .17ம் நூற்றாண்டு

நவீன காலம்                        - கிபி . 17ம் நூற்றாண்டு- இன்றுவரை




 
 

தென்னாட்டில் சைவம்

(அ) சங்ககாலத்தில் சைவம்

        பண்டைத் தமிழ் நூல்களிலிருந்து சைவசமயத்தின் வளர்ச்சியை அறியக்கூடியதாக இருக்கிறது.நில அமைப்புக்கு ஏற்றவாறு பண்டைத் தமிழ் மக்களது ஒழுக்கங்களும் வழிபாட்டு முறைகளும் அமைந்தன.சங்ககால மக்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய நிலங்களுக்கு உரிய தெய்வங்களாகமுறையே முருகன் திருமால் இந்திரன் வருணன் கொற்றவை ஆகிய தெய்வங்களை போற்றி வாழ்ந்தனரென்றும் இந்த தெய்வங்களுக்கு  எல்லாம் மேலாக ஒரு பரம்பொருள் உள்ளது என நம்பினார்கள்.
               சங்ககால இலக்கியங்களிலே பிறவா யாக்கை பெரியோன் நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் கறைமிடற்று அண்ணல் நுதல்விழி நாட்டத்து இறையோன் சூலம் பிடித்த சுடர்படைக்காலக்கடவுள் பிறங்கு நீர் சடைக்கரந்தான் ஏற்று ஊர்தியான் என வரும் தொடர்கள் சைவர்கள் போற்றும் சிவனை குறிக்கின்றன என்பது புலப்படும்.
            சிவம் என்ற சொல் செம்மை அளிப்பது மங்களத்தை அளிப்பது எனப் பொருள்படும். அது செம்மை சிவப்பு எனும் அடியாக பிறந்தது. செம்மேனியனான சிவன் “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என உமையம்மையோடு இணைத்து பேசப்படுவதை நோக்கும் பொழுது சிவமும் சக்தியும் ஒன்றிணைந்தவை என்ற கருத்தும் சைவம் ஆரம்ப காலத்திலேயே தோன்றிவிட்டது எனக் கொள்ளலாம்.
                  சங்கத்தமிழ் இலக்கியங்களிலே கொற்றவை பாலை நிலத்தெய்வமாக கொள்ளப்பட்டு அப்பகுதி மக்களாலே துதிக்கப்பட்டாள். சிலப்பதிகாரத்திலும் போற்றப்படுகிறாள். இக்கொற்றவை வழிபாடே பின் சக்தி வழிபாடாயிற்று என்பர். எனினும் சிவ வழிபாடே பண்டைக் காலந்தொட்டே தென்னிந்தியாவிற் சிறப்பிடம்பெற்றிருந்தது. சங்கமருவிய காலத்துக்கு உரியனவெனக் கொள்ளப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் சிவனுக்கும் முருகனுக்கும் பிற தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்தன என்று கூறப்படுவதோடு சிவனுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது.

                         “பிறவா யாக்கை பெரியோன் கோவிலும்
                         அறுமுகச் செவ்வேள்அணிதிகள் கோவிலும்......”
                                                                                 (சிலப்பதிகாரம்)
                         “நூதல் விழி நாட்டத்து இறையோன் முதலாப்
                          பதிவாழ் சதுக்க பூதமீறாக”
                                   (மணிமேகலை) 

  சங்ககால மக்கள் நடுகல் முதலான வழிபாடுகளில்
ஈடுபட்டிருந்தனர்

ஔவையார்

காலந்தோறும் வாழ்ந்த ஔவையார் என்னும் புலவர்களில் இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார். ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால், சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.

ஔவையார் 6 பேர், காலவரிசை

எண் குறியீடு காலம் பாடல் பாடல் பெற்றோர் வரலாறு
1 சங்க காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன் அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை சேர சோழ பாண்டியர், நாஞ்சில் வள்ளுவன் முதலானோர் அதியமானுக்கு நெல்லிக்கனி
2 இடைக்காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் - மூவேந்தர் அங்கவை சங்கவை மணம்
3 சோழர் காலம் 12-ஆம் நூற்றாண்டு ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை சோழர், அசதி அசதி, விக்கிரம சோழன்
,
4 சமயப் புலவர் 14-ஆம் நூற்றாண்டு ஔவை குறள், விநாயகர் அகவல் விநாயகர் அகவல் பாடல்கள்
5 பிற்காலம் – 1 16, 17-ஆம் நூற்றாண்டு - - தமிழறியும் பெருமான் கதை
6 பிற்காலம் – 2 17, 18-ஆம் நூற்றாண்டு பந்தன் அந்தாதி பந்தன் என்னும் வணிகன் பந்தன் செய்த சிறப்புகள்

சுப்பிரமணிய பாரதி

வாழ்க்கைக் குறிப்பு


1882-ம் ஆண்டு திசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில், பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார். “ தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? ” இலக்கியப் பணி
 பாரதியாரின் அபூர்வ புகைப்படம்
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி. நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுனைந்த கவிஞாயிறு. சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும் அண்மைக்கால தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.

இவரது கையொப்பம்
சுட்டும் விழி சுடர் - பாரதியார் பாடல்
      

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த சங்ககாலம்

தமிழ்ச்சங்கங்கள்


தமிழ் மொழியை, பண்பாட்டை, சமூகத்தை பாதுகாத்து, பகிர்ந்து, கொண்டாடி, மேம்படுத்தி, வளர்ப்பதை நோக்காக கொண்டு உலகமெங்கும் தமிழர்கள் வசிக்கும் ஊர்களில் ஏற்படுத்தப்படும் ஒர் அமைப்பே தமிழ்ச் சங்கம் ஆகும். இச்சங்கம் பொதுமக்களாலேயே, அனைவரையும் உள்வாங்கும் மனப்பாங்குடன் அமைக்கப்படுகின்றது. பொதுவாக தமிழ்ச் சங்கம் இலாப நோக்கு இல்லாமலும், சமய, சாதி, வர்க்க சார்பு அற்றதாகவும், தீவர அரசியல் நோக்குகள் அற்றதாகவும் அமையும். குறிப்பாக வெளிநாடுகளில் அமைக்கப்படும் தமிழ் சங்கங்கள் தமிழர்கள் எங்கிருந்து ஒர் ஊருக்கு வந்தாலும், தமிழ் என்ற பொது அடிப்படையில் தமிழ் சங்கத்தை அமைப்பர். இருப்பினும் ஒரே ஊரில் சில வேறுபாடுகள் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் அமைவதும் உண்டு. தற்காலத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புலவர்களை பெரும்பாலும் கொண்டு அரசர்களால் அமைக்கப்பட்ட பண்டைத் தமிழ்ச் சங்களில் இருந்து வேறுபட்டது. பண்டைத் தமிழ்ச் சங்கங்கள் தமிழை ஆய்வதற்கு, இலக்கிய படைப்புக்களை வெளிப்படுத்துவதற்கு களமாக அமைந்தன. அரசர்கள் அல்லது செல்வந்தர்கள் அச் சங்கங்களை ஆதரித்தமையால் படைப்புக்கள் பெரும்பாலும் அவர்களை மகிழ்விக்கும் இன்பவியல் இலக்கியங்களாகவோ அல்லது புகழ்ச்சி இலக்கியங்களாகவோ அமைந்தன. தற்காலத் தமிழ் சங்கங்கள் ஒரு சனசமூக அமைப்பாக, பொதுமக்களைப் பெரும்பாலும் உள்வாங்கி, முன்னிறுத்தி, பொது மக்களாலேயே கட்டமைக்கப்படுகின்றன. தற்காலத் தமிழ்ச் சங்கங்கள் கீழிருந்து எழும் அமைப்புகளாகவே இருக்கின்றன.

தமிழ்.

தமிழர் (Tamils) என்பவர் ஒரு தேசிய இனம் தமிழர்களின் தாய் மொழி தமிழ். தமிழர்கள் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும் இலங்கையுமே ஆகும். 1800-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா சிங்கப்பூர் பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே மொரிசியசு தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா பிரான்சு யேர்மனி சுவிற்சர்லாந்து டென்மார்க் நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 68 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியம்



தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா குறள் புதுக்கவிதை கட்டுரை பழமொழிஎன பல வடிவங்கள்
 உள்ளன.
Tamil palm leaf ~300 BC.jpg

தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்கிறார்கள். முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாக கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.

சோழர்

சோழர் என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர் சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழனும், அவனது மகனான முதலாம் இராசேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
கி.பி.10-12-ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சோழ நாடு
சோழப் பேரரசு

கி.மு. 300கள் – கி.பி.1279 Twin fish flag of Pandya.png
சோழப் பேரரசு கொடி
கொடி
சோழப் பேரரசு அமைவிடம்
சோழப்பேரரசின் ஆட்சி, அதிகாரத்தின் உச்சம்(கி.பி.1050)
தலைநகரம் முற்காலச் சோழர்கள்: பூம்புகார், உறையூர்,
இடைக்காலச் சோழர்கள்: பழையாறை, தஞ்சாவூர்
கங்கைகொண்ட சோழபுரம்
மொழி(கள்) தமிழ்
நெறி(கள்) இந்து சைவம்
அரசு முடியாட்சி
அரசன்
 - கி.பி.848-871 விசயாலயச் சோழன்
 - கி.பி.1246-1279 மூன்றாம் இராஜேந்திர சோழன்
பண்டைக்காலம் மத்திய காலம்
 - நிறுவிய ஆண்டு கி.மு. 300கள்
 - இடைக்காலச் சோழர்களின் எழுச்சி கி.பி.848
 - கலைக்கப்பட்டது கி.பி.1279
பரப்பளவு
 - கி.பி.1050 கணிப்பு 36,00,000 கிமீ² (13,89,968 சதுர மைல்)
தற்போதைய நிலை இந்தியாவின் கொடி இந்தியா
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர்
மலேசியா கொடி மலேசியா
இந்தோனேசியா கொடி இந்தோனேசியா
சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர்
Flag of the Maldives மாலைதீவுகள்
தாய்லாந்து கொடி தாய்லாந்து
கம்போடியாவின் கொடி கம்போடியா

சேரர்

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டைஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால்அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும் வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.


சேர நாடு
சேரளம்

கி.மு. 500 – கி.பி. 1102
சேரளம் அமைவிடம்
தலைநகரம் கரூர்
மொழி(கள்) தமிழ்
நெறி(கள்) இந்து
அரசு
முடியாட்சி
பண்டைக்காலம்
சங்க காலம்
, மத்திய காலம்  - நிறுவிய ஆண்டு
கி.மு. 500
 - இரண்டாம் சேரர்கள்.
கி.பி. 800
 - கலைக்கப்பட்டது
கி.பி. 1102
தற்போதைய நிலை
இந்தியாவின் கொடி இந்தியா

பாண்டியர்கள்

பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.[6] இதுவே இவர்களைப் பற்றிய வரலாறு புராணங்களாகவும், இலக்கியங்களாகவும், காப்பியங்களாகவும், இதிகாசங்களாகவும், நாட்டுப்புறக் கதைகளாகவும் வளர வழிவகுத்து இவர்கள் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் இல்லாமல் செய்கின்றன.
குமரிக் கண்டத்தில் தோன்றிய மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது. இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது. இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது. இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
  • இராமாயணத்தில்
பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்றும் முத்து, பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்றும் இராமாயணத்தில் உள்ளது.[8]
  • மகாபாரதத்தில்
திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை உண்டு.திருப்பாண்டி கொடுமுடிதான் விராடநாடு.பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர். மேலும் அருச்சுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தான் எனவும் உள்ளது.
  • புராணங்களில்
பல இந்து மத புராணங்களும், தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புர கதைகளும் பல பாண்டிய மன்னர்கள் இருந்ததாகவும் அவர்கள் வரிசையாக பதவியேற்றதாகவும் குறிப்பிடுகின்றன. இது தவிர்த்து திருவிளையாடல் புராணங்களில் எழுபதுக்கும் மேற்ப்பட்ட பாண்டிய மன்னர்களும்,[9] நற்குடி வேளாளர் வரலாற்றில் 201 பாண்டிய மன்னர்களும்[10], இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரையில் 197 பாண்டியர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.
இப்புராணங்கள் படி மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி, இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது[11]. சோமசுந்தரப் பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர்[12].மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள். அதன் வழிவந்த வழிமுறையினரே மௌரியர்கள் என்று கருதப்படுகிறது. அந்த வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாண்டி நாடு
பாண்டியப் பேரரசு

கி.மு. 500கள்[2][3][4][5] – கி.பி. 1600[1]

Blank.png
பாண்டியப் பேரரசு கொடி
கொடி
பாண்டியப் பேரரசு அமைவிடம்
பாண்டியப்பேரரசின் ஆட்சி,
அதிகாரத்தின் உச்சம்(கி.பி.1250-1325)
தலைநகரம் முற்காலப் பாண்டியர்கள்: கொற்கை, மதுரை
இடைக்காலப் பாண்டியர்கள்: மதுரை

பிற்காலப் பாண்டியர்: மதுரை

தென்காசிப் பாண்டியர்கள்: தென்காசி, திருநெல்வேலி
மொழி(கள்) தமிழ்
நெறி(கள்) சமணம், இந்து
அரசு முடியாட்சி
வேந்தர்
 - கி.பி.575 - 600 கடுங்கோன்
 - கி.பி.900 - 945 மூன்றாம் இராசசிம்மன்
 - கி.பி.1216-1238 முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
 - கி.பி.1268-1311 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
பண்டைக்காலம் சங்க காலம், மத்திய காலம்
 - நிறுவிய ஆண்டு கி.மு. 500கள்[2][3][4][5]
 - முதலாம் பாண்டியப் பேரரசு கி.பி.575 - கி.பி. 945
 - இரண்டாம் பாண்டியப் பேரரசு கி.பி. 1216
 - கலைக்கப்பட்டது கி.பி. 1600[1]
தற்போதைய நிலை இந்தியாவின் கொடி இந்தியா
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை