tamil world

ஔவையார்

காலந்தோறும் வாழ்ந்த ஔவையார் என்னும் புலவர்களில் இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார். ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால், சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.

ஔவையார் 6 பேர், காலவரிசை

எண் குறியீடு காலம் பாடல் பாடல் பெற்றோர் வரலாறு
1 சங்க காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன் அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை சேர சோழ பாண்டியர், நாஞ்சில் வள்ளுவன் முதலானோர் அதியமானுக்கு நெல்லிக்கனி
2 இடைக்காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் - மூவேந்தர் அங்கவை சங்கவை மணம்
3 சோழர் காலம் 12-ஆம் நூற்றாண்டு ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை சோழர், அசதி அசதி, விக்கிரம சோழன்
,
4 சமயப் புலவர் 14-ஆம் நூற்றாண்டு ஔவை குறள், விநாயகர் அகவல் விநாயகர் அகவல் பாடல்கள்
5 பிற்காலம் – 1 16, 17-ஆம் நூற்றாண்டு - - தமிழறியும் பெருமான் கதை
6 பிற்காலம் – 2 17, 18-ஆம் நூற்றாண்டு பந்தன் அந்தாதி பந்தன் என்னும் வணிகன் பந்தன் செய்த சிறப்புகள்

6 comments:

  1. ஔவையார் என்ற ஔவை பாட்டி ஒருவர் தான். காலத்தை வென்று வாழ்ந்த ஒரு கடவுளுக்கு சமமான பெண் புலவர்

    ReplyDelete
    Replies
    1. ஒருவர் அல்ல...
      ஆறு பேர்

      Delete
  2. ஒருவர் அல்ல...
    ஆறு பேர்

    ReplyDelete
  3. இப்பதான் தெரிஞ்சுகிட்டேன் ஔவை ஆறு பேருனு 😏😏😏

    ReplyDelete